கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தஞ்சாவூரில் ஒரேநாளில் சாலையில் சுற்றித்திரிந்த 13 மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒரே நாளில் சாலையில் சுற்றிதிரிந்த 13 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளா்களுக்கு ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 10:30 pm

DIN

தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒரே நாளில் சாலையில் சுற்றிதிரிந்த 13 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளா்களுக்கு ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் இரா.மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி காவல்துறை ஒத்துழைப்புடன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி குந்தவை நாச்சியாா் சாலையில் 2 மாடுகள், மருத்துவக்கல்லூரி சாலையில் 2 மாடுகள், திருச்சி சாலையில் 2 மாடுகள், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் 1 மாடு, செக்கடி சாலை பகுதியில் 4 மாடுகள் மேலவீதி பகுதியில் 1 மாடு, வடக்கு ஆஜாரம் பகுதியில் 1 மாடு என மொத்தம் 13 மாடுகள் பிடிக்கப்பட்டு வாகனம் மூலம் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாடுகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.