பாபநாசம்: பாபநாசத்தில் உள்ள அன்பு பேக்கரியில் நடந்து வரும் கேக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள நடிகர்கள் விஜய், அஜித் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட கேக்கை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அன்பு பேக்கரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றன. இந்த கண்காட்சியில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ்கிரீம்கேக் உள்பட 100-க்கும் மேற்பட்ட வகை வகையான கேக்குகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வெவ்வேறு வகையான புதிய சுவையில் கேக்குகள் தயார் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த கேக் திருவிழாவில், தமிழக சினிமா துறையின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் உருவங்கள் பொறிக்கப்பட்ட இரண்டு உருவங்களும் சேர்ந்து, மொத்தம் 120 கிலோ எடை, சுமார் 6 அடி ஆள் உயரம் கொண்ட கேக்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பேக்கரி கூட்டமைப்பு மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், ஏராளமான விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும், பொதுமக்களும் கண்டு, கேக்குகளை உண்டு மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

