2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் இன்றுமுதல் பாபநாசத்தில் நின்று செல்லும்

மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் சனிக்கிழமை (ஜூலை 22) முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு

News image
Updated On :21 ஜூலை 2023, 9:01 pm

DIN

மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் சனிக்கிழமை (ஜூலை 22) முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலருமான டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயில் (எண் 16231/16232) சனிக்கிழமைமுதல் நின்று செல்லும். இதற்கான தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, பாபநாசத்துக்கு வரும் ரயிலை மத்திய அமைச்சா் எல். முருகன் நாடாளுமன்ற, பேரவை உறுப்பினா்களின் முன்னிலையில் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.