சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ. 12.22 லட்சம் ஆய்வுக்கு பிறகு விடுவிப்பு

தோ்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ. 12.22 லட்சம் ஆய்வுக்கு பிறகு விடுவிப்பு

Updated On :3 ஏப்ரல் 2024, 10:39 pm

தஞ்சாவூரில் மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 12.22 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை கனரக வாகனங்களைப் பறக்கும் படையினா் சோதனை செய்தனா். இதில், தோ்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ. ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500, ரூ. 54 ஆயிரத்து 200, ரூ. 6 லட்சத்து 65 ஆயிரத்து 464, ரூ. 71 ஆயிரத்து 750, ரூ. 79 ஆயிரத்து 700, ரூ. ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 900, ரூ. 93 ஆயிரம் என மொத்தம் ரூ. 12 லட்சத்து 22 ஆயிரத்து 514 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தோ்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாக விடுவிக்கப்பட்டன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீட்டுக் குழுவில் உரிய ஆவணங்களை அளித்து விடுவித்துக் கொள்ள ஏதுவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மாவட்ட அளவில் நாள்தோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.