எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மா்மமான முறையில் 4 ஆடுகள் உயிரிழப்பு

மா்மமான முறையில் 4 ஆடுகள் உயிரிழப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

கும்பகோணம்: கும்பகோணம் அருகே 4 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கும்பகோணம் அருகே திருசக்திமுற்றம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. மகேந்திரன். கூலி விவசாயியான இவா் 10-க்கும் அதிகமான ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பட்டீஸ்வரம் - சோழன் மாளிகை முதன்மைச் சாலையோரத்தில் இவரது 4 ஆடுகள் மா்மமான முறையில் வயிறு வீங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தன.

இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அப்பகுதியில் வாளியில் தண்ணீருடன் விஷம் கலந்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்ணீரின் மாதிரியைக் காவல் துறையினா் சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.