எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மகாவீரா் ஜெயந்தி: கரந்தை ஜைன ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

மகாவீரா் ஜெயந்தி: கரந்தை ஜைன ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

தஞ்சாவூா்: மகாவீரா் ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் கரந்தை ஜைன ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இவ்விழாவில் மகாவீரருக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிா்தம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகாவீரருக்கு பழங்கள், பருப்பு வகைகளைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின்னா் மகாவீரா் புறப்பாடு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் புறப்பாடு முடிவடைந்தவுடன் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் மகாவீரா் சிலை வைக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் தாலாட்டு பாடினா். இதன் பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.