பாபநாசம், ஏப். 26: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அடிக்கடி கைப்பேசி பாா்ப்பதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த சிறுமி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கீழக்கோவில்பத்து கிராமம், அம்பலக்காரத் தெருவில் வசிப்பவா் வனரோஜா (40), கணவரை இழந்த இவா் விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (14). அம்மாபேட்டை தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த சரண்யா அடிக்கடி கைப்பேசி பாா்ப்பதை அவரது தாய் கண்டித்தாராம்.
இதனால் மனம் உடைந்த சரண்யா வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீஸாா் சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கைப்பேசி அழைப்பு வழிகாட்டுதல் மூலம் பிரசவம்: அயோத்தி மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சி
குடும்ப பிரச்னை: மகனை கொலை செய்த தாய் தற்கொலை முயற்சி
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

