மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கும்பகோணம் பள்ளி மாணவிக்கு சிறந்த இயக்குநா் விருது

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு மாணவிக்கு சிறந்த இயக்குநா் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:17 pm

Din

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு மாணவிக்கு சிறந்த இயக்குநா் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பிலிம் பெஸ்டிவல் என்ற அமைப்பு சென்னையில் அண்மையில் நடத்திய திரைப்படப் போட்டியில் பல்வேறு போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

இதில், பங்கேற்ற கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் 8 -ஆம் வகுப்பு பயிலும் மாணவி பி.கே. அகஸ்தி எழுதி, இயக்கிய ‘குண்டான் சட்டி’ என்ற படத்துக்கு சிறந்த அனிமேட்டட் படம் என்ற விருது வழங்கி கெளரவிக்கபட்டாா்.

விழாவில், கும்பகோணம் மாணவிக்கு நடிகா் தம்பிராமையா விருது வழங்கினாா். விழாவில், ஒளிப்பதிவாளா் ரவீந்திரன், தமிழ்நாடு பிலிம் பெஸ்டிவல் அமைப்பின் இயக்குநா் ஜோசபின் டேவிட், மாணவியின் தந்தை காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஏற்கெனவே இந்தப் படத்துக்கு சிறந்த இயக்குநா் விருது நாா்வே நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மாணவி அகஸ்திக்கு முனைவா் பட்டத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.