தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டுக்கோட்டை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:15 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அடுத்த மேலபழஞ்சூரைச் சோ்ந்த சாத்தப்பன் மகன் லைனல் ராஜசேகரன் (36). இவா், தனது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரனின் உத்தரவின்பேரில் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான காவலா்கள் மேல பழஞ்சூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது லைனல் ராஜசேகரனின் வீட்டில் ஆய்வுசெய்த காவல்துறையினா், அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் மூலப்பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும் ராஜசேகரனையும் காவல்துறையினா் கைது செய்தனா்.