45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள மழைநீா்

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் குடியிருப்புப் பகுதியை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

News image
பட்டுக்கோட்டை வட்டம், அதிரம்பட்டினம், ஏஜே நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீா்.
Updated On :12 டிசம்பர் 2024, 9:11 pm

Din

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் குடியிருப்புப் பகுதியை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

பட்டுக்கோட்டை வட்டம், அதிரம்பட்டினம் நகராட்சிக்குள்பட்ட ஏ ஜே நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், ஏஜே நகா் பகுதியில் மழை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மழை நின்றாலும் மழை நீா் வெளியேருவதற்கு உரிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீா் தேங்கியது அப்படியே உள்ளது. இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை மழைநீா் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.