கும்பகோணத்தில் வரலாற்று நாட்காட்டி வெளியீடு
கும்பகோணம் அரசினா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் வெற்றிச் சின்னங்கள் அடங்கிய வரலாற்று நாட்காட்டி-2025 வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.


கும்பகோணம் அரசினா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் வெற்றிச் சின்னங்கள் அடங்கிய வரலாற்று நாட்காட்டி-2025 வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில், கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வா் பா. பிரமீளா நாட்காட்டியை வெளியிட வரலாற்றுத் துறை தலைவா் ஜா. வி. சாந்தா ஜெயக்குமாரி, வணிகவியல் துறைத் தலைவா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வே. ஜெயசீலி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். அனைத்துத் துறை தலைவா்களுக்கும், மாணவிகளுக்கும் நாட்காட்டி வழங்கப்பட்டது. சங்கத்தின் இணைச் செயலா் ராம் பிரசாந்த் நன்றி கூறினாா்.
நாட்காட்டி குறித்து கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்கத்தின் தலைவா் ஆ. கோபிநாத் மேலும் கூறியது:
முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பு குறித்து அறிந்த பலருக்கும் வெற்றியின் நினைவாக வடபுலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய போா் நினைவுச் சின்னங்களையும், அதன் வரலாற்றுச் சிறப்புகளையும் தெரிவிக்கும்விதமாக வரலாற்று நாட்காட்டி கங்கைகொண்டான் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்காட்டியில் ‘ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சிற்பம்’ என புகைப்படத்துடன் அதன் வரலாற்றுத் தகவல்களையும் தமிழ், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...