காங்கிரஸ் மனித உரிமைத் துறையினா் வெள்ள நிவாரணம் வழங்கல்
கும்பகோணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறையினா் நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.

Updated On :19 டிசம்பர் 2024, 8:51 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறையினா் நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உமையாள்புரம், கருப்பூா் ஆகிய 2 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இவா்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறைத் தலைவா் விஜயகுமாா் பெட் சீட், உணவும் மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கினாா். அப்போது, அண்டக்கொடி ராம்ஜி , மோசநாதன், ரஜினி ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...