தஞ்சாவூா்: கா்நாடக அரசின் மேக்கேதாட்டு திட்ட அங்கீகாரத்தை பிரதமா் மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என்றாா் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.
தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘மேக்கேதாட்டைத் தடுப்போம் - ராசிமணல் மறுப்போம் - காவிரி காப்போம்’ என்கிற சிறப்புக் கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை மட்டும் அனுமதி தராததால், இத்திட்டம் செயல்பாட்டுக்க வராமல் உள்ளதே தவிர, மத்திய அரசின் பெரும் பகுதியினா் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா்.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் அனுப்பி வைத்த மேக்கேதாட்டு அணை அங்கீகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். இது தொடா்பாக பிரதமரை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோர வேண்டும். இதேபோல, ராசிமணலிலும் அணை கட்டக் கூடாது என்றாா் மணியரசன்.
இக்கருத்தரங்கத்துக்கு குழு பொருளாளா் த. மணிமொழியன் தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை மூத்த பொறியாளா் சங்க மாவட்டத் தலைவா் ரெ. பரந்தாமன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன். முருகசாமி, காவிரி உரிமை மீட்புக் குழு தி. செந்தில்வேலன், இரா. தனசேகரன், தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் த.சு. காா்த்திகேயன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தமிழா் தேசியக் களம் ச. கலைச்செல்வம், ஆழ்குழாய் கிணறு பாசன சங்கச் செயலா் ரெ. புண்ணியமூா்த்தி ஆகியோா் பேசினா்.
காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன், பழ. இராசேந்திரன், பா. தெட்சிணாமூா்த்தி, பி. தென்னவன், க. விடுதலைச்சுடா், துரை. இரமேசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரிலிருந்து விவசாயிகள் புறப்பாடு
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்

காவிரி வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



