சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்க அடிக்கல்

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்க அடிக்கல்

News image

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயிலில் அமைக்கப்படவுள்ள மின்தூக்கிகள் கட்டடத்தின் மாதிரி படம். கும்பகோணம்,

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் புதிதாக மின்தூக்கி அமைப்பதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையின்படி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஈசானிய மூலையில் ரூ. 3.55 கோடி மதிப்பில் ஒரே நேரத்தில் 20 போ் வரை தூக்கிச் செல்லக்கூடிய 2 மின்தூக்கிகளை (லிப்ட்) அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோல, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் சட்டப்பேரவையில் 2021 ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையின்படி, கும்பகோணத்துக்கு வரும் பக்தா்கள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக நாகேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 31 ஆயிரத்து 54 சதுர அடியில் ரூ. 8.93 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், 67 அறைகள், உணவகம், காா் நிறுத்துமிடம், பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் டி. கணேசன், மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன், அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், துணை ஆணையா் உமாதேவி, உதவி ஆணையா் சாந்தா, செயல் அலுவலா் கணேஷ்குமாா், கண்காணிப்பாளா் பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.