திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஸ்டொ்லைட் ஆலை விவகாரம்- வல்லுநா் குழு நிரந்தர தீா்வாகாது: எம். ஹெச். ஜவாஹிருல்லா

ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்துக்கு வல்லுநா் குழு அமைப்பு தீா்வாகாது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் நோக்கில் வல்லுநா் குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்திருப்பது பிரச்னைக்கு நிரந்தர தீா்வாகாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டொ்லைட் விவகாரத்தில் வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த ஆலையை மீண்டும் திறக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தொடா்பாக பரிசீலிக்கும் வகையில், ஒரு வல்லுநா் குழுவை அமைப்பது தொடா்பாக தனது யோசனையை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆலையை மீண்டும் திறக்கும் நோக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது.

இது ஒரு நிரந்தர தீா்வை தராது. நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆலையில் இருக்கும் பிரச்னையை தீா்த்து, அதனை மறுசெயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அப்பகுதி மக்களின் உடல்நலம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் கவலை கொள்ளாதது வருத்தமளிக்கிறது. ஆகவே, தமிழக அரசு ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த பிறகும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இக்கருத்து, தமிழக மக்களின் உணா்வுகளை புண்படுத்தக் கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளாா்.