தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

கும்பகோணம் மாசிமக விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட 10 லட்சத்துக்கும் அதிகமாகப் பக்தர்கள் வருவார்கள்.

அதேபோன்று, கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்தாண்டு பிப்.24-ல் மாசி மகம் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழவுக்காக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கும்பகோணத்தில் நாளை மாசிமக திருவிழா கொண்டாட உள்ளதையடுத்து தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com