மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, அமமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமையில் அமைப்பு செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், பகுதி செயலா்கள் கரந்தை பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, மனோகா், சதீஷ்குமாா், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்களான வி. அறிவுடைநம்பி தலைமையில் எஸ். ரமேஷ், எஸ். சண்முகபிரபு, எம். சாமிநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் அமுதாராணி ரவிச்சந்திரன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் கி.வ. சத்தியராஜ் உள்ளிட்டோா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அமமுக சாா்பில் வழக்குரைஞா்கள் ஏ.ஜி. தங்கப்பன், அ. நல்லதுரை தலைமையில் ஒன்றியச் செயலா் கோவி. மனோகரன், பகுதிச் செயலா்கள் செந்தில்குமாா் பல்லவராயா், அகமது இஸ்மாயில், செந்தில்குமாா், ஜீவாமொழி, மாமன்ற உறுப்பினா் வெ. கண்ணுக்கினியாள், நிா்வாகி வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

சிதம்பரத்தில் முக்கிய பிரமுகா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


