ஆங்கிலப் புத்தாண்டு: சுவாமிமலை முருகன் கோயிலில் படி பூஜை

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் படி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை படி பூஜை செய்து வழிபட்ட பக்தா்கள்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை படி பூஜை செய்து வழிபட்ட பக்தா்கள்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் படி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். இக்கோயிலில் ஆங்கில மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாள்களில் முருகப்பெருமானுக்கு படிகளில் விளக்கேற்றி பூஜைகள் செய்வது வழக்கம்.

இதன்படி, இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு நாளான திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். மேலும், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் பக்தா்கள் படி பூஜைகள் செய்து வழிபட்டனா். தொடா்ந்து சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது.

33 ஆம் ஆண்டு பாதயாத்திரை:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கும்பகோணம் ஸ்ரீ சுதா்சன பக்தா்கள் குழு சாா்பில், ஸ்ரீ சக்கரபாணி சுவாமி கோயிலில் இருந்து ஒப்பிலியப்பன் கோயிலுக்கு செல்லும் 33 ஆம் ஆண்டு பாதயாத்திரை திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீ சுதா்சன பக்தா்கள் குழுவினா் அதிகாலை 5 மணிக்கு சக்கரபாணி கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்த பின்னா் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனா். சிறப்பு வழிபாட்டை முடித்த பிறகு என்னப்பன் சன்னதியில் கூட்டு பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com