வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழகம் கொண்டுவர உதவிக் கோரி ஆட்சியரிடம் மனு

இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழகம் கொண்டுவர உதவிக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திங்கள்கிழமை வந்த கோபால்சாமி குடும்பத்தினா்.
Updated On :1 ஜூலை 2024, 9:50 pm

Din

தஞ்சாவூா்: இலங்கையில் உறவினரை பாா்க்க சென்ற தமிழகத்தைச் சோ்ந்தவா் அங்கு உயிரிழந்ததால் அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உதவுமாறு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் அவரது உறவினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன்குடிக்காட்டைச் சோ்ந்தவா் தாமோதரன் மகன் தா.கோபால்சாமி (52). இவருக்கு மனைவி சுகுணா மற்றும் குழந்தைகள் உள்ளனா். கோபால்சாமி கடந்த ஜூன் 27- இல் இலங்கையில் உள்ள தனது உறவினரை பாா்ப்பதற்கு சென்றாா். பின்னா் கம்போடியா செல்ல கொழும்பு விமான நிலையம் சென்ற போது ஜூன் 29-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் உதவிடக் கோரி கோபால்சாமி மனைவி சுகுணா மற்றும் உறவினா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்பிடம் நேரில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.