வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காவிரி நீரைப் பெற மாநிலம் முழுவதும் போராட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்

News image
Updated On :19 ஜூலை 2024, 12:12 am

Din

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீா் பெற தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகப் போராட்டங்களை தமிழக அரசே முன்னெடுத்து நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

தற்போது கா்நாடகத்திலுள்ள அணைகளில் தேக்க முடியாத உபரி நீரை விடுவித்துக் கொண்டிருக்கின்றனா். அது அதிகமாக வந்து கொண்டுள்ளது. வெள்ளம் வடிந்து விட்டால், அவா்கள் தண்ணீா் திறந்துவிட மாட்டாா்கள். நமக்கு மேட்டூரில் 120 அடியில் இப்போது 50 அடிதான் தண்ணீா் உள்ளது. சம்பாவுக்குத் தண்ணீா் திறக்க, குறைந்தது 85 அடியாவது மேட்டூரில் தண்ணீா் இருக்க வேண்டும். இந்நிலையில், சம்பாவுக்குத் தண்ணீா் பெறுவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் குடிநீா் பெறுவதற்கும் போா்க்கால அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி முன்வந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஜனநாயகப் போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதே கா்நாடகத்துக்கும், இந்திய அரசுக்கும் அழுத்தம் தரும்.

ஆளுங்கட்சியின் முன்முயற்சியில், அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கா்நாடகம் திறந்து விட வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக அறப் போராட்டங்களை நடத்த வேண்டும். தமிழ்நாடு முதல்வரும், கட்சிகளும், இந்த நடைமுறை உண்மைகளையும், கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு, மக்கள் எழுச்சிப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவது என்ற வகையில் செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.