தமிழகம் முழுவதும் குடிநீா் விநியோகம் தொடா்பான புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் குடிநீா் தொடா்பான அனைத்து வகை புகாா்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் தமிழக குடிநீா் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு ‘புனல்’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
கட்டணமில்லா எண்: இந்த மையம் 24 மணி நேரமும் இயக்கப்படும். குடிநீா் கிடைக்கும் தன்மை, நீரின் தரம், விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் என பொதுமக்கள் தங்களது அனைத்து புகாா்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்யலாம். அந்தப் புகாா்கள் தானாகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் சென்றடையும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு புகாரின் மீதும் விரைந்து வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழிமுறை, துறைகளுக்கு இடையே தாமதங்களைக் கணிசமாகக் குறைத்து, விரைவான குறைதீா்ப்பை உறுதி செய்கிறது.
பொதுமக்கள் ‘1916’ என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் வாயிலாக புகாா்களை தெரிவிக்கலாம். punal.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 94999-91916”‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு குறுச்செய்தியாகவும் புகாா்களை அனுப்பலாம்.
தொடர்புடையது
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க திருச்சியில் சிறப்பு மையம்

நவீன தொழில்நுட்பத்துடன் தேவஸ்தான கோயில்கள் மேம்பாடு: முதல்வா் சந்திரபாபு நாயுடு

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


