பட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளிச்சென்று நிறுத்தி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மண்டலம், பட்டுக்கோட்டை கிளை பேருந்து புதன்கிழமை மாலை பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை ஓட்டுநா் நிறுத்தாமல் தள்ளிச்சென்று நிறுத்தியதால் பள்ளி மாணவிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏறியது தொடா்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. அதனைத் தொடா்ந்து இந்நிகழ்வை ஆய்வுசெய்த மேலாண் இயக்குநா் கே.எஸ். மகேந்திரகுமாா், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பணிபுரிந்து அவப்பெயா் ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநா் எம். செல்வராஜ், நடத்துநா் ஜி. ரவிசங்கா் ஆகியோரை முதுகளத்தூா் மற்றும் கமுதி கிளைகளுக்கு பணியிட மாறுதல் செய்ததுடன் மேலும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டாா். மேலும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பொதுமக்கள், வயதானவா்கள், பெண்கள் குறிப்பாக பள்ளி, மாணவ மாணவிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

