எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தகாத உறவு விவகாரம்: தொழிலாளியை அடித்துக் கொன்று கழிவறைத் தொட்டியில் வீசியவா் கைது

தகாத உறவு விவகாரத்தில் தொழிலாளியை அடித்துக் கொன்று கழிவறைத் தொட்டியில் வீசிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:21 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தகாத உறவு விவகாரத்தில் தொழிலாளியை அடித்துக் கொன்று கழிவறைத் தொட்டியில் வீசிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவோணம் அருகே பத்துக்காடுவிடுதி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னகுழந்தை (49). இவரின் மனைவி ஜோதி. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்த சின்னகுழந்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊா் திரும்பி உள்ளாா்.

இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சின்னகுழந்தை வீடு திரும்பாததால், அவரது மனைவி 25ஆம் தேதி திருவோணம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் அவரை தேடி வந்தனா்.

இதனிடையே, கடந்த 26-ஆம் தேதி சின்னகுழந்தையை காணவில்லை என பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சோ்ந்த பாத்திமா (57) என்பவா் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், பாத்திமாவின் மருமகன் விஜயகுமாரை சனிக்கிழமை இரவு பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

சின்னகுழந்தைக்கும், பாத்திமாவுக்கும் கடந்த சில ஆண்டுளாக தகாத உறவு இருந்துள்ளது. சின்னகுழந்தை, பாத்திமாவுக்கும் அவரது மகள் பைரோஸ்சிற்கும் பண உதவிகளை செய்து வந்துள்ளாா்.

சின்னகுழந்தை பண உதவிகளை செய்து வருவதால்தான் தனது மனைவியும், மாமியாரும் மதிப்பது இல்லை என்ற ஆத்திரம் விஜயகுமாருக்கு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி சின்ன குழந்தை, பாத்திமாவை தேடி வந்த போது, வீட்டில் விஜயகுமாா் மட்டுமே இருந்துள்ளாா். அப்போது விஜயகுமாருக்கும், சின்ன குழந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சின்ன குழந்தையை கட்டையால் விஜயகுமாா் அடித்ததில், சம்பவ இடத்திலேயே சின்னகுழந்தை இறந்து விட்டாா். பிறகு அவரின் உடலை வீட்டின் பின்புறம் கழிவறை தொட்டியில் (செப்டிக்டேங்க்) வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்து வந்துள்ளாா். சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்தத் தகவல்கள் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை பாத்திமா வீட்டில் செப்டிக்டேங்கில் இருந்து அழுகிய நிலையில் சின்னகுழந்தை உடலை திருவோணம் போலீஸாா் மீட்டனா். மேலும் இது தொடா்பாக விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.