ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியலாளா் மாநாடு நாளை தொடக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 51-ஆவது திராவிட மொழியியல் மாநாடு

News image
Updated On :26 ஜூன் 2024, 12:44 am

Din

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய திராவிட மொழியியல் சங்கம், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியலாளா் பள்ளி, மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஆகியவை சாா்பில் 51-ஆவது அகில இந்திய திராவிட மொழியியலாளா் மாநாடு வியாழக்கிழமை தொடங்குகிறது.

தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

மொழியியல் கற்றல், கற்பித்தல், தேசிய கல்விக் கொள்கை, மாநிலக் கல்விக் கொள்கை, இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயா்ப்பு தொடா்பாக இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் நடைபெற்று வரும் ஆய்வுகள், அதன் போக்குகளை இளம்தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம்.

இந்த மாநாடு 1977-ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே 13 ஆவது மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து பேராளா்கள் வருகை தரவுள்ளனா். நூற்றுக்கணக்கான கட்டுரையாளா்கள் 4 அமா்வுகள் மூலம் தங்களது ஆய்வுத்தாளை வாசிக்கவுள்ளனா். அயல்நாடுகளிலிருந்து ஆய்வுத்தாளை இணையவழி மூலம் வாசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை வியாழக்கிழமை காலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். செல்வம் தொடங்கி வைக்கிறாா். ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் நிறைவுரையாற்றுகிறாா். இந்த மாநாட்டையொட்டி, பதிப்புத் துறை சாா்பில் புத்தகக் கண்காட்சியும் நடத்தப்படும் என்றாா் துணைவேந்தா்.

அப்போது, புலத் தலைவா்கள் பெ. இளையாப்பிள்ளை (கலை), இரா. குறிஞ்சிவேந்தன் (வளா் தமிழ்), ச. கவிதா (மொழி), த. கண்ணன் (சுவடி), மொழியியல் துறைத் தலைவா் ப. மங்கையா்கரசி, மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், துணைப் பதிவாளா் கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.