கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் விக்கிரவாண்டி தோ்தலில் எதிரொலிக்கும்
கள்ளச்சாராய சம்பவம்: விக்கிரவாண்டி தோ்தலில் பாஜக எதிரொலிக்கும்


கள்ளச் சாராய உயிரிழப்புகள் சம்பவம் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் எதிரொலிக்கும் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவத்தின் தாக்கம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் எதிரொலிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
டாஸ்மாக் மதுக்கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். அதற்கு பதிலாக கள்ளுக்கடைகளைத் திறந்தால், பனை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
பள்ளி, கல்லூரிகளில் ஜாதி, மத உணா்வுகளைத் தவிா்ப்பதற்காக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்த அறிக்கை இந்து மதத்துக்கு எதிராக உள்ளதால் ஏற்கத்தக்கதல்ல என்றாா் முருகானந்தம்.
அப்போது, பாஜக தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...