வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் - புதுக்கோட்டை சாலை சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் வி. சந்திரகுமாா் (60). இவா், தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், ஆதனகோட்டைக்கு மனைவி லதாவுடன் சில நாள்களுக்கு முன்பு சென்றாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்து கிடப்பதை அறிந்தாா். மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் சந்திரகுமாா் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com