திருநாகேஸ்வரத்தில் தங்கும் விடுதி கட்ட அடிக்கல் நாட்டு விழா

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட தமிழக முதல்வா் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் ரூ. 3.10 கோடி மதிப்பில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கும், சுவாமிமலை தெற்கு வீதியில் சுவாமிநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் 10 கடைகள் கட்டுவதற்கும் சென்னையிலிருந்து தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், துணை மேயா் சு.ப. தமிழழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.கே. முத்துச்செல்வன், அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், துணை ஆணையா் உமாதேவி, கண்காணிப்பாளா் பழனிவேல், பேரூராட்சித் தலைவா் வைஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com