இறால் பண்ணை  ஊழியா் மா்மச்சாவு

சேதுபாவாசத்திரம் அருகே இறால் பண்ணை ஊழியா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம்,  சேதுபாவசத்திரம் அருகே காரங்குடா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வெளிமடம்  பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் மகன் கணேசமூா்த்தி(36)  வேலைபாா்த்து வந்தாா். இவா்,  வெள்ளிக்கிழமை காலை இறால் பண்ணையில் உள்ள கொட்டகையில்  உடலில்  காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா் . இதுகுறித்து தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் கணேசமூா்த்தியின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com