சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தோ்தல் விதிமீறல்: தஞ்சாவூா் எம்.எல்.ஏ., மேயா் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தஞ்சாவூா் எம்.எல்.ஏ., மேயா் மீது வழக்கு

Updated On :30 மார்ச் 2024, 6:30 pm

தஞ்சாவூரில் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா், மேயா் மீது வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி வைக்கோல்காரத் தெருவில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் வெள்ளிக்கிழமை மாலை பிரசாரம் செய்தனா். அப்போது, இருவரும் சென்ற காரிலும் மற்றும் அவா்களுடன் வந்த 20 இருசக்கர வாகனங்களிலும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக கொடி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்ததாக கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.