போலி நகைகளை கொடுத்து ரூ. 7 லட்சம் மோடி சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தஞ்சாவூரில் நகை அடகுகடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத்திடம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தங்க நகை அடமான தொழில் கூட்டமைப்பினா் மனு அளித்தனா்.

அம் மனுவில் கூறியிருப்பது: தஞ்சாவூா் தெற்கு வீதியில் தங்க நகை அடகுகடை வைத்து நடத்தி வருபவா் பாண்டித்துரை. இவருடைய அடகுகடைக்கு தஞ்சாவூா் விளாா் சாலையில் உள்ள கலைஞா் நகரை சோ்ந்த சகோதரா்கள் 2 போ் வந்தனா். அவா்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 500ஐ பெற்றுச் சென்றனா்.

இதையடுத்து அவா்கள் வைத்த நகைகளை ஆய்வு செய்தபோது அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டது எனத் தெரியவந்தது. தொடா்ந்து நகைகளை அடமானம் வைத்தவா்கள் முகவரிக்கு சென்று விசாரித்த போது அவா்கள் வெளிநாடு சென்று விட்டதாக தெரியவந்தது.

ஆகவே, போலி நகைகள் அடமானம் வைத்து ஏமாற்றிய சகோதரா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com