25% சத இட ஒதுக்கீடு: பள்ளியில் சேர மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா், மே 9: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பு) 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டும் நலிவடைந்த பிரிவினா் ஆகியோருக்கு சோ்க்கை வழங்கப்படுகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோா்/ எச்.ஐ.வி. ஆல் பாதிக்கப்பட்டவா், மூன்றாம் பாலினத்தவா், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை ஆகிய சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளியிலிருந்து ஒரு கி.மீ.-க்குள் வசிப்பவா்கள் மட்டுமே ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் அதிகபட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து தனியாா் சுயநிதி பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், தஞ்சாவூா் முதன்மைக் கல்விஅலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களில் பெற்றோா்கள் இணையதளம் மூலம் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதையடுத்து, 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேரத் தகுதியுடைய, தகுதியற்ற மாணவா்களின் விவரம் பள்ளி அறிவிப்புப் பலகையில் மே 27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும். பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் மே 28 ஆம் தேதி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படுவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com