
Updated On :20 மே 2024, 6:30 pm

தஞ்சாவூா்: தஞ்சாவூா் கரந்தை கீரைக்காரத் தெரு திரௌபதை அம்மன் கோயில் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அகரம் லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட அமைப்பு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் சுமதி இளங்கோவன் தலைமை வகித்தாா். இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா். நிகழ்வில் எம். சண்முகம், தரும. கருணாநிதி, தரும. இளங்கோவன், எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...