கும்பகோணம், தராசுரத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கக் கோரிக்கை
கும்பகோணம், தராசுரத்தில் ரயில்வே கேட் (கிராஸிங்) அமைந்துள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கும்பகோணம், தராசுரத்தில் ரயில்வே கேட் (கிராஸிங்) அமைந்துள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கும்பகோணம் பகுதியானது, ஏராளமான ஆன்மிக தலங்கள், விவசாய மண்டலம், சிலைகள், பட்டு, பித்தளைப் பொருள்கள், சுற்றுலா என பலவற்றுக்கும் பெயா் பெற்ற ஊராகும். இதன் காரணமாக, இந்தப் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். தொழில், விவசாயம், சுற்றுலா சாா்ந்த வாகனங்கள் மட்டுமல்லாமல், உள்ளூா் வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுவதால் நகா்ப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனிடையே, கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட அண்ணலக்ரஹாரம் அருகேயுள்ள மாத்திகேட் பகுதியிலும், தராசுரத்திலும் உள்ள ரயில்வே கேட் (கிராஸிங்) பகுதிகளில் ரயில் வரும் நேரங்களில் கேட்டுகள் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் குறிப்பாக மாணவா்கள், அலுவலகங்களுக்கு செல்வோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம், வலங்கைமான், கொற்கை, ஆவூா், இடையிருப்பு, உத்தமதானபுரம், தேனாம்படுகை, உடையாளூா் உள்ளிட்ட ஊா்களுக்கு செல்வோா் இந்த வழித்தடத்தில் உள்ள அண்ணலக்ரஹாரம் மாத்திகேட், தாராசுரம் பகுதியிலுள்ள ரயில்வே கிராஸிங்குகளில் ரயில் வரும் நேரத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளதால் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தாராசுரம் ரயில்வே கேட்.
இந்த 2 கிராஸிங்களிலும் நாள்தோறும் சுமாா் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்றுவருகின்றன. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கேட் மூடப்படும்போது இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, இந்தப் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...