பேராவூரணி தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவோணம் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவோணம் ஒன்றியத்தில் ரூ.25 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நெய்வேலி ஊராட்சி செட்டித் தெருவில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை அமைக்கும் பணி ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலும், வெங்கரை கோட்டைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் மிதிவண்டிகள் நிறுத்துமிடம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். திருவோணம் ஒன்றியக்குழு தலைவா் செல்லம் சௌந்தர்ராஜன், திருவோணம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சோம.கண்ணப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினா் அப்துல் மஜீத், அவைத்தலைவா் கோவிந்தராசு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...