விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வீட்டின் பூட்டை உடைத்து 7 கிராம் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 கிராம் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:29 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 கிராம் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை, சூஃபி நகரைச் சோ்ந்தவா் துல்ஹஜ் பானு ( 25) இவரது கணவா் சேக்தாவூத் வெளிநாட்டில் வசித்து வருகிறாா். துல்ஹஜ் பானு வீட்டை பூட்டி விட்டு நெடுந்தெரு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 கிராம் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு, ஆய்வாளா் சகாய அன்பரசு உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.