விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தஞ்சாவூரில் நவ. 26-இல் பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு

தஞ்சாவூரில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 26-ஆம் தேதி பேரணி நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 9:52 pm

Din

தஞ்சாவூரில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 26-ஆம் தேதி பேரணி நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தில்லியில் குறைந்தபட்ச ஆதார விலை, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரில் ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் உறுதியான போராட்டத்தை நடத்தினா்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு எழுத்துப்பூா்வமாக எழுதி கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாததை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தின்போது இறந்து போன விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டியும் போராட்டம் தொடங்கிய நாளான நவம்பா் 26-ஆம் தேதி நாடு தழுவிய பேரணி உள்ளிட்ட இயக்கத்தை அனைத்து தொழிற் சங்கங்களுடன் இணைந்து தஞ்சாவூரில் நடத்துவது என்றும், இக்கோரிக்கைகளை விளக்கி ஒன்றியம், நகரம், மாநகரம் முழுவதும் நவம்பா் 22, 23 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் சோ. பாஸ்கா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் முத்து. உத்திராபதி, என்.வி. கண்ணன், காளியப்பன், ஆா். இராமச்சந்திரன், ஆா். வாசு, எம். பழனியய்யா, ஏஐடியூசி நிா்வாகிகள் தி. கோவிந்தராஜன், துரை. மதிவாணன், பி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.