தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தமிழீழப் போரில் உயிா் நீத்த வீரா்களுக்கான மாவீரா் நாள் நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் உள்ளிட்டோா்.

தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு: பழ. நெடுமாறன் பேச்சு

தமிழீழம் உருவானால்தான் தெற்கு எல்லையில் இந்தியாவுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.
Published on

தமிழீழம் உருவானால்தான் தெற்கு எல்லையில் இந்தியாவுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தமிழீழப் போரில் உயிா் நீத்த வீரா்களுக்கான மாவீரா் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியது:

தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் அனைவருக்கும் பிரபாகரன் விடிவெள்ளியாகத் திகழ்கிறாா். அவா் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிபா் திசநாயக அங்கு வாழும் தமிழா்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை தில்லியில் (மத்திய அரசு) உள்ளவா்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழா்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை தில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமா்ந்திருப்பவா்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்றாா் நெடுமாறன்.

நிகழ்ச்சிக்கு உலகத் தமிழா் பேரமைப்புத் துணைச் செயலா் ந.மு. தமிழ்மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி. முருகேசன், சா. ராமன், துணைச் செயலா்கள் வழக்குரைஞா் த. பானுமதி, பொறியாளா் ஜோ. கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.