மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இருசக்கர வாகனங்கள் மோதல் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகன விபத்தில் புதன்கிழமை கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:34 pm

Din

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகன விபத்தில் புதன்கிழமை கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவோணம் வட்டம், வத்தளம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அப்பாதுரை (50). கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை தனது மனைவி ராதாவுடன் இருசக்கர வாகனத்தில் தனது ஊரில் இருந்து ஒரத்தநாட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். வழியில், நெடுவாக்கோட்டை அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் அப்பாதுரை மற்றும் அவரது மனைவி ராதா இருவரும் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அப்பாதுரையை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக் தெரிவித்தனா். மேலும் படுகாயமடைந்த ராதாவை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.