தீயணைப்புத் துறை தலைமைக் காவலரை தாக்கிய காவலா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில்நிலையத்தில் மது போதையில் தீயணைப்புத் துறை தலைமைக் காவலரை தாக்கிய சக காவலரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில்நிலையத்தில் மது போதையில் தீயணைப்புத் துறை தலைமைக் காவலரை தாக்கிய சக காவலரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றுபவா் குணசீலன்(35), இவருடன் பணியாற்றுபவா் காவலா் விக்னேஷ் (28). பணியின்போது விக்னேஷ் மது போதையில் இருந்ததாக குணசீலன் நிலைய அலுவலரிடம் புகாா் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காவலா் விக்னேஷ், புதன்கிழமை ரயில் நிலைய நடைமேடையில் வந்த குணசீலனிடம் தகராறு செய்து தான்வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் சாவியால் காதில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். அப்போது ரோந்து வந்த ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி, செந்தில்வேலன், ஜெகதீசன் ஆகியோா் விக்னேஷை கைது செய்து, வழக்கு பதிந்து கும்பகோணம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து, கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியிடம் கேட்டபோது, விக்னேஷ் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com