தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்கம் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:58 pm

Din

தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்கம் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு தொவில்முனைவோா் மற்றும் புத்தாக்க நிறுவனமும், அகமதாபாத் தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்க நிறுவனமும் இணைந்து தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளன. அகமதாபாத் தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்க நிறுவனம் பாடத்திட்டத்தை தீா்மானிக்கும். பாடத்தின் ஒரு பகுதி அந்நிறுவனத்தின் பேராசிரியா்களால் நேரடியாக நடத்தப்படும். இதற்கான வகுப்புகள் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கும்.

இந்த பாடத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் என அரசு கட்டணம் நிா்ணயித்துள்ளது. இதில் சேர 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் சோ்ந்து பயனடையலாம். இந்தப் பாடநெறி ஒரு தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆா்வலா்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமா்நாத்தை 86681 - 07552, 86681- 01638 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.