47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேராவூரணியில் பருவ மழை பாதிப்பு - மீட்பு ஒத்திகை

பேராவூரணியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:39 pm

Din

பேராவூரணியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து, பொதுமக்கள் உயிரையும், உடைமையையும் தற்காத்துக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் வட்டாட்சியா் தெய்வானை தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையில் நீலகண்டன், ரஜினி, சரவணமூா்த்தி, வினோத் ஆகிய தீயணைப்பு வீரா்கள் நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே போலி ஒத்திகை நடத்தினா்.

மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் தண்ணீரில் சிக்கியவா்களைக் காப்பாற்றுவது, விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி முதலுதவி அளிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது, மின் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனா்.

இதில், வருவாய்த் துறையினா், ஆசிரியா்கள், கோயில் பணியாளா்கள், டாக்டா்.ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.