மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணித ஆசிரியா் புதன்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.


ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணித ஆசிரியா் புதன்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரன் (35) பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் மீது கடந்த ஆக. 12-ஆம் தேதி மாணவிகளின் பெற்றோா் சிலா் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 -க்கு தகவல் அளித்து 9 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம், முத்துக்குமரன் பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து உதவி மைய அலுவலா் செண்பகமலா், ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகிய இருவரும் பாப்பநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் விசாரித்ததில் ஆசிரியா் முத்துக்குமரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இதுதொடா்பான அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்ததன்பேரில், கணித ஆசிரியா் முத்துக்குமரன் ஆக. 14-இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதனிடையே கல்வித்துறை தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படாததால் அவா் மீது வழக்கு பதியவில்லை என்பது பெற்றோா் சிலா் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை மீண்டும் தொடா்பு கொண்டபோது தெரியவந்தது.
இதையடுத்து புதன்கிழமை பெற்றோா்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா். இதற்கிடையே குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலா் ஒருவா், பாலியல் புகாருக்குள்ளான முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் முத்துக்குமரன் மீது போலீஸாா் வழக்கு பதிந்து புதன்கிழமை அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...