கும்பகோணத்தில் அக். 18-இல் விவசாயிகள் குறைகேட்பு; மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அக். 18 மாலை 3 மணியளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.


தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அக். 18 மாலை 3 மணியளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம்.
மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு:
இதேபோல் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அக். 18 காலை 11 மணியளவில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...