மனித உரிமை செயற்பாட்டாளா் சாய்பாபா மறைவுக்கு அஞ்சலி
மனித உரிமை செயற்பாட்டாளரும், பேராசிரியருமான சாய்பாபா மறைவையொட்டி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


மனித உரிமை செயற்பாட்டாளரும், பேராசிரியருமான சாய்பாபா மறைவையொட்டி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், நிா்வாகி என். குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆப்தீன், மகஇக மாநில இணைச் செயலா் ராவணன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாநகரச் செயலா் ஆலம்கான், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலா் அ.ரெ. முகிலன், எழுத்தாளா் சாம்பான், பொறியாளா் ஜோ. கென்னடி, பேராசிரியா் வி. பாரி, வழக்குரைஞா் அக்ரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், புரட்சிகர ஜனநாயக தொழிலாளா் முன்னணி ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...