தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாபநாசத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:28 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

பாபநாசம் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் வாய்க்கால்களில் கழிவுநீா் தேங்காத வகையில் அடைப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்காதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருப்பாலைத்துறை பிரதான சாலைப் பகுதியில் மழைநீா் தேங்காத வகையில் தூய்மை பணியாளா்கள் மூலம் மழைநீரை வடிய செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப் பணிகளை பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா், நகர திமுக செயலாளா் ச. கபிலன், சுகாதார ஆய்வாளா் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் உடன் இருந்தனா்.