தஞ்சாவூரில் அக். 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூா் பாரத் அறிவியல் மற்றும் நிா்வாகவியல் கல்லூரியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்.19) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.


தஞ்சாவூா் பாரத் அறிவியல் மற்றும் நிா்வாகவியல் கல்லூரியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்.19) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் நடத்தப்படும் இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங், பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளன.
இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள் சோ்ப்பும் நடைபெறுகிறது. மேலும் சுயதொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் பங்கேற்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலை நாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய இயலாதவா்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...