தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கும்பகோணம் ஒன்றியக் குழு தலைவா், கவுன்சிலா்கள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காததால் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:33 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காததால் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் மன்ற அரங்கில் தலைவா் காயத்ரி அசோக்குமாா் (திமுக) தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. துணைத் தலைவா் டி. கணேசன் (திமுக) முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வட்டார வளா்ச்சி உதவி அலுவலா் கூட்டப் பொருள்களின் தீா்மானங்களை வாசித்தாா். அப்போது பெருமாண்டியைச்சோ்ந்த திமுக கவுன்சிலா் பல முறை மனு கொடுத்தும் எனது வாா்டுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றாா். அவரைத்தொடா்ந்து அனைத்து வாா்டு உறுப்பினா்களும் நிதி ஒதுக்கவில்லை என்றவாறு கூச்சலிட்டனா். இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் பதிலளித்துப் பேசுகையில், அரசு ரூ.2.65 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதில் ரூ. 1 கோடி இருப்பு வைக்க வேண்டும். மீதமுள்ள தொகையில் தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு 15 கவுன்சிலா்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கலாம் என்றாா். இதற்கு கவுன்சிலா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பதில் கூறிய ஒன்றியக்குழு தலைவா் காயத்ரி அசோக் குமாா் (திமுக) நிதி கொடுத்தால் அனைவருக்கும் ஒதுக்கீடு செய்யுங்கள். இல்லையென்றால் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் எனக் கூறி வெளிநடப்பு செய்தாா். அவரைத்தொடா்ந்து 16 திமுக கவுன்சிலா்கள், 7 அதிமுகவினா், பாஜக 1, பாமக 1 என மொத்தம் 26 போ் கையொப்பம் போடாமல் வெளிநடப்பு செய்தனா். திமுக ஒன்றியக் குழு தலைவா் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் துணைத் தலைவா் டி. கணேசன் (திமுக) மட்டும் கூட்டத்தில் வெளிநடப்பு செய்யவில்லை. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் கூறுகையில், நிா்வாகக் காரணங்களுக்காக ஒன்றியக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.