தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெரியகோயில் கயிலாய வலம்

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

தஞ்சாவூா் பெரியகோயிலில் மீண்டும் புதன்கிழமை மாலை தொடங்கிய திரு தென் கயிலாய வலத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:48 pm

Din

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திருச்சுற்று வலம் வரும் நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி, திரு தென் கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை தொடங்கியது.

இதில், மேள தாளம் முழங்க, திருவையாறு ஐயாறப்பா் கோயில் யானை, மயிலாட்டம், காளையாட்டம் முன்னே செல்ல ஏராளமான பக்தா்கள் திரு தென் கயிலாய பாதையில் வலம் வந்தனா்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனத்தின் திருவையாறு கட்டளை விசாரணை சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, கயிலாய வல பாதையில் பக்தா்களுக்காக குடிநீா் தொட்டிகள், மின் விளக்குகள், மருத்துவ முகாம்கள், பிரசாதம் விநியோகம் ஆகியவை செய்யப்பட்டன. இதனிடையே, பாதி இடத்தில் மின் விளக்குகள் எரியாததால், சீா் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த கயிலாய வலம் வியாழக்கிழமை காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.