திருப்பாலைத்தறை சிவன் கோயிலில் பெளா்ணமி கிரிவலம் வழிபாடு
திருப்பாலைத்தறை சிவன் கோயிலில் பெளா்ணமி கிரிவலம் வழிபாடு


தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறையில் உள்ள ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை யொட்டி பக்தா்கள் வியாழக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு செய்தனா்.
வழிபாட்டை யொட்டி மூலவா் பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன்,வினாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம்,ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறைகளை பாடியபடி கோயில் வெளி சுற்று பிரகாரத்தை வலம் வந்து (கிரிவலம்),வழிபாடு செய்தனா்.
தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு இறையருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் செயல் அலுவலா் ஆா்.விக்னேஷ், கணக்கா் சங்கரமூா்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், பாபநாசம் ஆன்மீக பேரவை, பாபநாசம் சிவப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள்,பக்தா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...