தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கும்பகோணத்தில் குவிண்டால் பருத்தி ரூ.8,399-க்கு ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ.8,399- க்கு ஏலம் போனது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:42 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ.8,399- க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் விற்பனைக்குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலக் கூட்டத்துக்கு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி தலைமை வகித்தாா். மேற்பாா்வையாளா் பா. பிரசாத் முன்னிலை வகித்தாா்.

பருத்தி ஏலத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 77 லாட்கள் மூலம் 45 குவிண்டால் பருத்தி வரத்து வந்தது. அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.8,399-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.5,909-ம், சராசரி விலையாக ரூ.6,039-க்கும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனா். கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஏலம் போன பருத்தியின் மதிப்பு ரூ.2.71 லட்சம் ஆகும்.